Wednesday, February 28, 2024
Home » பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை முன்னாள் சிறப்பு டிஜிபி 2வது நாளாக ஆஜராகி வாதிட்டார் விசாரணை 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை முன்னாள் சிறப்பு டிஜிபி 2வது நாளாக ஆஜராகி வாதிட்டார் விசாரணை 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Karthik Yash

விழுப்புரம், பிப். 3: பாலியல் வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு வழக்கில் நேற்று 2வது நாளாக விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து மீண்டும் விசாரணை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை, ரூ. 20,500 அபராதமும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதான குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகின்றன. இதனிடையே இந்த வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி தாக்கல் செய்த ராஜேஷ்தாசின் மனுவை உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தன. இதனிடையே விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டிஜிபி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்காவிட்டால், நீதிமன்றமே மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதிட நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது சிறப்பு டிஜிபி ஆஜராகி, தானே வாதிட அனுமதிகேட்டு தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்தார். தொடர்ந்து வரும் 7ம் தேதி வரை சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகி தினசரி வாதத்தை தெரிவிக்கலாம் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உணவு இடைவேளைக்கு பிறகு 2வது நாளாக ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்தார். தொடர்ந்து வாதம் நிறைவடையாத நிலையில் நீதிபதி பூர்ணிமா வரும் 5ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சிறப்பு டிஜிபி தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

fourteen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi