விருதுநகர், டிச.7: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவு கூரும் வகையில் பாலின அடிப்படையில் பாகுபாட்டிற்கு எதிரான சமூகம் தலைப்பிலான தேசிய பிரச்சாரத்தை ஊரக வளர்ச்சி அமைச்சகம் தொடங்கி உள்ளது. அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு தொடர்பான ஊர்வலத்தை மாவட்ட திட்ட இயக்குநர் ஜார்ஜ் மைக்கேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அல்லம்பட்டி முக்கு ரோடு வரை சென்ற ஊர்வலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பாதகைகளை ஏந்தி சென்றனர்.