சிவகங்கை, நவ. 22: சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது. சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்ட துவரங்குறிச்சியை சேர்ந்த ராசு, முருகேசன், இளையான்குடி பகுதியை சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மானாமதுரை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்ட முத்துக்குமார், வில்வக்குமார், ராமசாமி, அஜய்குமார், தவமுனியசாமி ஆகியோரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட எஸ்பி டோங்கரேபிரவீன்உமேஷ், கலெக்டர் ஆஷா அஜித்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.