ஈரோடு, செப். 2: பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளை தடுக்க அரசு தலைமைச் செயலர் பங்கேற்கும் காணொலி கூட்டம் இன்று (2ம் தேதி) நடைபெறவுள்ளது. ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான காணொலி கூட்டம் இன்று (2ம் தேதி) மதியம் 3 மணியளவில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவக்கல்லூரி மற்றும் அனைத்து தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள், அனைத்து துறை தலைவர்களும் இந்த காணொலி கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.