பொன்னை, ஆக.27: பொன்னை பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் துறைமுருகன் ஆய்வு செய்தார். பொன்னை ஆற்றின் குறுக்கே ₹40 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், புதிதாக கட்டிய மேம்பாலம் மற்றும் விழாவின் முன்னேற்பாடுகளை நேற்று முன்தினம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, எம்பி கதிர் ஆனந்த், தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், வேலூர் துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஒன்றிய குழு சேர்மன் வேல்முருகன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், அதிகாரிகள் விழா மேடை அமைக்க உள்ள இடங்களை தேர்வு செய்து அதிகாரிகளிடம் கலந்துரையாடினர்.