வலங்கைமான், ஆக. 31: திருவாரூர் கோட்டத்திற்கு உட்பட்ட உட்கோட்டம் வலங்கைமான் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கீழ் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் இளம்வழுதி வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.
குடவாசல் உதவி கோட்ட பொறியாளர் சரவணன், வலங்கைமான் உதவி பொறியாளர் நவீன் குமார் மேற்பார்வையின் கீழ் சிறு பாலங்களில் உள்ள நீர்வழிப் பாதைகள் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் பாலங்களில் உள்ள சிறு பழுதுகள் சரி நீக்கம் செய்யப்பட்டு வெள்ளை வர்ணம் பூசும் பணிகளில் சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். வலங்கைமான் கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் உள்ள திட்டை- தாராசுரம் சாலையில் உள்ள நீர்வழிப் பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு சிறு பாலங்கள் பலது நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.