திருச்சி, அக்.19: திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிபிரிவு மற்றும் பார்வை குன்றியவர்களுக்காக சிறப்பான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பார்வை குன்றியவர்களுக்காக மாவட்ட மைய நுாலகம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் ரோட்டாி பீனீக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி -iv (டி,என்.பி,எஸ்,சி குரூப் -iv) போட்டி தேர்விற்கான பயிற்சி வகுப்பு வரும் 22ம்தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. தேர்விற்கு தயார் செய்யும் பார்வை குன்றியவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.