நன்றி குங்குமம் தோழி2019ம் ஆண்டில் 60 வயதில் அடி எடுத்து வைக்கிறாள். இந்த வயசிலும் முகத்தில் ஒரு சுறுக்கம் இல்லை. 16 வயதில் இருந்த அதே பளபளப்பு மற்றும் வனப்பில் மேன்ேமலும் ஜொலிக்கிறாள் என்று தான் சொல்லணும். பொன்னிறம் அல்லது கருங்கூந்தல், ஒல்லியான இடுப்பு… என இன்னும் இளவரசி போல் பவனி வருகிறாள். அவள் வேறு யாரும் இல்லை, இன்றும் குழந்தைகளின் மனதில் குடிக் கொண்டு இருக்கும் பார்பி பொம்மை தான். என்னதான் அவளால் பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் கடந்து இன்னும் அதே வனப்புடன் இளம் பெண்கள் கையில் தவழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். சொல்லப்போனால், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுதும் 150 நாடுகளில் சுமார் 58 மில்லியன் பார்பி பொம்மைகள் விற்கப்படுகிறது.‘‘எந்த ஒரு நிறுவனத்திலும் குறிப்பாக பொம்மை தொழிலில் சுமார் மூன்று முதல் ஐந்து வருடம் தான் வெற்றிக் கனியை சுவைக்க முடியும். ஆனால் 60 ஆண்டுகள் என்பது பெரிய விஷயம்’’ என்கிறார் பார்பியின் சர்வதேச விற்பனை நிர்வாகியான நாதன் பேநார்ட்.மார்ச் மாதம் 9ம் தேதி 1959ம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற பொம்மை கண்காட்சியில் தான் பார்பி பொம்மை அறிமுகம் செய்யப்பட்டது. பார்பியை அறிமுகம் செய்தவர் மேட்டல் என்ற பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனரான ரூத் ஹாண்டலர். பார்பி பொம்மை உருவாக முக்கிய காரணம் ஹாண்டலரின் மகள் பார்பரா. அவள் டீன் பருவத்தை எட்டிக் கொண்டு இருந்தாள். ஒரு நாள் ரூத், காகித பொம்மையுடன் விளையாடிக் கொண்டு இருந்த பார்பராவை பார்த்தார். அவள் தான் தேர்வு செய்யும் பொம்மைகளின் கதாபாத்திரமும் மிகவும் வரையறுக்கப்பட்டதாக தான் இருந்தது. இவரின் மகன் ஒரு பக்கம் பைலட், டாக்டர், விண்வெளி வீரர் என்ற கதாபாத்திரத்துடன் விளையாட மகளோ அம்மா, அக்கா, தங்கை என தனக்கென்று ஒரு துணையாக தான் பொம்மைகளை நினைத்தாள். பெரிய பொம்மை நிறுவனத்தின் உரிமையாளரின் மகள் சாதாரண காகித பொம்மையுடன் விளையாடுவதை பார்த்தவர் அவள் வயதில் இருக்கும் பெண்களும் இப்படித்தானே விளையாடுவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. காகித பொம்மைகளில் விளையாடும் போது அது ஒரு பொம்மையுடன் விளையாடும் உணர்வினை ஏற்படுத்தாது. தன் மகளுக்காகவே 3டி பிளாஸ்டிக் பொம்மையை அறிமுகம் செய்ய நினைத்தார். ஆனால் ரூத்தின் கணவர் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகி இது போன்ற அழகான உடலமைப்பு கொண்ட பொம்மையை பெற்றோர்கள் வாங்க மாட்டார்கள் என்றனர். இதற்கிடையில் ரூத் குடும்பத்துடன் ஐரோப்பியாவிற்கு விடுமுறைக்காக சென்றிருந்தார். அங்கு ஒரு கடையில் பில்ட் லில்லி என்ற பொம்மையை பார்த்தார். ரூத்தின் மனதில் இருந்த அதே பொம்ைமயின் அமைப்பில் தான் லில்லி பொம்மை இருந்தது. லில்லியை வாங்கி வந்தவர் அதில் மாற்றங்களை செய்து, பார்பி என்ற பெயரில் பொம்மையை அறிமுகம் செய்தார். ஆனால் பார்பி, ரூத் நினைத்தது போல் வெற்றி பெறவில்லை. இந்த சமயம் தொலைக்காட்சியில் டிஸ்னி நிறுவனம் மிக்கி மவுஸ் குழந்தைகளுக்கான கார்ட்டூன் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது. அதை பார்த்து ரூத் பார்பி பொம்மையை பெரிய அளவில் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தார். பார்பி பொம்மை குழந்தைகள் மத்தியில் பெரிய ஹிட்டானது. முதலாண்டே 3 லட்சம் பொம்மைகள் விற்று தீர்ந்தது.என்னதான் பார்பி பொம்மை குழந்தைகள் மத்தியில் பெரிய சக்சஸ் என்றாலும், குறுகிய உடலமைப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 1959ம் ஆண்டு அவளின் உடலமைப்பு அழகியல் ரீதியாக மாற்றி அமைக்கப்பட்டது. பொன்னிற கூந்தல் கொண்ட பார்பி பொம்மை தான் கடைகளில் முதலில் விற்பனைக்கு வந்தது. ஆனால் இது பார்க்க தத்ரூபமாக இல்லை என்று புகார் வந்ததால், பார்பி பொம்மை பல உருவ அமைப்பில் அறிமுகமானது.1965ம் ஆண்டு, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் எடுத்து வைத்த நான்கு ஆண்டுக்கு முன்பே விண்வெளி வீராங்கனை பார்பி அறிமுகமானாள். 1968ல் பார்பின் தோழியான கருப்பு நிற கிரிஸ்டி என்ற மற்ெறாரு பார்பி பொம்மை அறிமுகமானது. இப்போது உலகமெங்கும் விற்கப்படும் 55% பார்பி பொம்மைகளுக்கு பொன்னிற கூந்தல் மற்றும் நீல நிற கண்கள் கிடையாது. பார்பி பொம்மையை வடிவமைக்கும் வடிவமைப்பாளர்கள் ஆரம்பத்தில் பார்பியை ஓவியமாக தான் வரைவார்கள். அதன் பிறகு தான் பல நிபுணர்கள் குழுவால் அதற்கு ஒரு உருவம் கொண்டு வரப்படும். பார்பின் முகம் 3டி முறையில் பெயின்ட் செய்யப்படும். அவளின் அழகான நீண்ட கூந்தல் மற்றும் உடைகள் என ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக தேர்வு செய்யப்படுகிறது. ஒரு புது பார்பி பொம்மை உருவாக குறைந்த பட்சம் ஒன்று முதல் ஒன்றரை வருடங்களாகும். அதன் பிறகு இதன் முன்மாதிரிகள் கலிஃபோர்னியா தொழிற்கூடத்தில் இருந்து சீனா மற்றும் இந்தோனேஷியாவில் இருக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.ஷம்ரிதி…
பார்பிக்கு 60 வயசாச்சு!
46
previous post