கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் நசீர் முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.பி கல்யாணசுந்தரம், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் மற்றும் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலை மற்றும் இலக்கிய பேரவை செயலாளர் வண்ணை அரங்கநாதன், விவசாய தொழிலாளர் அணி தலைவர் மதிவாணன் மற்றும் விவசாய அணி துணைத்தலைவர் வேதரத்தினம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், தொடங்க உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும், தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்க உள்ள ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மாபெரும் முன்னெடுப்பை வரும் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி ஜூன் 3ம் தேதி அன்று கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்குவதற்குள் துண்டறிக்கைகள், திண்ணை பிரச்சாரங்கள், முக்கிய இடங்களில் முகாம் அமைப்பது மூலமாகவும், வீடுதோறும் தேடி சென்றும் புதிய உறுப்பினர்களை இணைத்திட வேண்டும், நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலுக்கு அதிகளவு கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்திட வேண்டும், மாநகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள திருக்கோயில்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட தகுதியானவர்களை திருக்கோயில் அறங்காவலர்களாக தேர்வு செய்து கொடுத்திட வேண்டும், எதிர்வரும் 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய கட்சியினர் அனைவரும் ஓய்வின்றி பாடுபட வேண்டும் உள்ளிட்டவைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் வட்டத்திற்குட்பட்ட மாவட்ட, தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட சார்பு அணிகளின் பிரதிநிதிகள், மகளிரணியினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்….