சோமனூர்,ஆக.29:சூலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வடக்கு ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் கணியூரில் நடைபெற்றது. இதில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, மற்ற அனைத்து கட்சிகளையும் விட மிக அதிக வாக்குகள் பெற்று தந்த கட்சி நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது.கூட்டத்திற்கு சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.
இதில் செம்மாண்டம்பாளையம் ஊராட்சியின் வடுங்காளிபாளையம் கிளை கழகத்தை சார்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் மூன்று பேருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன்,சுந்தரம்,பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ்,மாவட்ட பிரதிநிதிகள் கோபால்சாமி,பூபதி,கண்ணன்,அறங்காவலர் குழு சிபி,செந்தில், கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி,பதுவம்பள்ளி ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞரணி ஜெகதீஷ் உள்ளிட ஒன்றிய மாவட்ட கழக நிர்வாகிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துள்ளனர். கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.