ராணிப்பேட்டை, ஜூன் 30: ஆற்காடு தாலுகா, பெரிய அசேன்புரா பகுதியை சேர்ந்தவர் முகமது அசேன்(27). இரு தினங்களுக்கு முன்பு செட்டித்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த பாம்பு பிடிக்க சென்றுள்ளார். அப்போது தான் வைத்திருந்த பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக பாம்பு அசேனை கடித்துள்ளது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.