சென்னிமலை,மே5: சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு, அம்மன்கோவில் புதூரை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி ருக்மணி (68). இவர் கடந்த 1ம் தேதி இரவு சென்னிமலை அருகே நொய்யலில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மன் கோவில் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது ருக்மணியின் காலில் பாம்பு கடித்து விட்டது.
பின்னர் உடனடியாக ருக்மணியை அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று ருக்மணி இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.