அரூர், ஆக.21: தர்மபுரி கிழக்கு மாவட்ட பாமக சார்பில், அரூர் சட்டமன்ற தொகுதி தலைவர், செயலாளர், மகளிர் சங்க தலைவர் பதவிகளுக்கான நியமன மனு பெறுதல் கூட்டம், அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அல்லிமுத்து வரவேற்றார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, சமூகநீதி பேரவை தலைவரும், மாநில செய்தி தொடர்பாளருமான பாலு, மாநில சிறுபான்மை அணி தலைவர் ஷேக் மொய்தீன் பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்துகொண்டு விருப்ப மனுக்கள் பெற்று சிறப்புரை ஆற்றினர்.இதில் மாநில உழவர் பேரியக்க செயலாளர் வேலுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் திருவேங்கடம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொருளாளர் நாகேஷ்வரி சின்னசாமி, கம்பைநல்லூர் துணை சேர்மன் மதியழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாமக நியமன மனு பெறுதல் கூட்டம்
previous post