போச்சம்பள்ளி, ஆக.29: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி பாமக ஆலோசனை கூட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். சமூக நீதிப்பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு, சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஷேக்மொய்தீன், பசுமை தாயக மாநில துணை செயலாளர் பொன்மலை, முன்னாள் எம்எல்ஏ மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட தலைவர் அண்ணாமலை வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், கணேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பில்லாமாதேஷ், மாநில செயற்குழு குமார், மாவட்ட துணை தலைவர் ரவி, மணி, சரவணன், மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பாமக ஆலோசனை கூட்டம்
previous post