பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், சிறுதானியங்களின் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு, அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறைகள் குறித்த உள்மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வேளாண் அலுவலர் ஜீவகலா துவங்கி வைத்து, சிறுதானியங்களின் முக்கியத்துவம், சிறுதானியங்களுக்கான மானிய திட்டங்கள், வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் தேக்கு மரங்கள் மானியத்தில் வழங்குதல், பிரதமரின் கௌரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம், விதை நேர்த்தி செய்வதனால் உண்டாகும் நன்மைகள், நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் உயிர் உரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட இயக்குனர் வெண்ணிலா கலந்துகொண்டு, சிறுதானியங்களில் உயர் விளைச்சல் ரகங்கள், விதையளவு, விதை நேர்த்தி, தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி
previous post