பாப்பிரெட்டிப்பட்டி, நவ.18: பாப்பிரெட்டிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகள் பூஜாஸ்ரீ(15). இவர் மூக்காரெட்டிபட்டி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி பள்ளிக்கு சென்ற பூஜாஸ்ரீ, மாலையில் வீட்டிற்கு வரவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கதிரேசன், ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பிளஸ்2 மாணவி மாயம்
50
previous post