பாப்பிரெட்டிப்பட்டி, மே 25: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தென்கரைகோட்டை ஆகிய 4 வருவாய் உள்வட்டத்தில் உள்ள, 45 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்து முடிந்தது. இதில் பொதுமக்கள் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்பட வருவாய்த்துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். ஜமாபந்தி நிறைவு விழாவுக்கு ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார். கடந்த, 4 நாட்களாக நடந்த ஜமாபந்தியில், 880 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டதில், 36 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 811 மனுக்கள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன. நிகழ்ச்சியில் தனி தாசில்தார் ஜெயசெல்வம், தலைமையிடத்து துணை தாசில்தார் ஞானபாரதி, மண்டல துணை தாசில்தார் சக்திவேல் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,கள் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டியில் ஜமாபந்தி நிறைவு விழா
0