Wednesday, April 24, 2024
Home » பாபநாசம் தொகுதி மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைப்பு

பாபநாசம் தொகுதி மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைப்பு

by Mahaprabhu

கும்பகோணம், ஏப்.3:கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிடங்கில் இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி, தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன், முதல் நிலை வருவாய் ஆய்வாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய 361 வாக்குச்சாவடி வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

13 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi