கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் தனியார் கல்வி சங்கத்தில் உலக உணவு தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் தங்க.கண்ணதாசன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் உஷாராணி முன்னிலை வகித்தார். இதில் உணவின் முக்கியத்துவம், உணவை பாதுகாப்பது, சரியான ஊட்டச்சத்து, உணவை வீணாக்க கூடாது, உணவு தேவைகளை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், குடிநீர் பாதுகாப்பு, உணவு பாதுகாப்புக்கு தண்ணீர் இன்றியமையாதது போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பசியில்லாத உலகத்தை காண்போம், ஏழை எளியோருக்கு உணவு அளிப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். முடிவில் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.