வாழப்பாடி, ஆக.22: வாழப்பாடியில், பானிபூரி சாப்பிட்ட 5 வயது சிறுவன் வாந்தியெடுத்து மயங்கி விழுந்ததையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி நல்லதம்பி கவுண்டர் தெருவில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் மௌலிராஜ்(5). இவன், தனது தந்தையுடன் சென்று வாழப்பாடி பயணியர் மாளிகை எதிரே உள்ள கடையில் பானிபூரி சாப்பிட்டுள்ளான். வீடு திரும்பிய சிறிது நேரத்தில் சிறுவன் வாந்தி எடுத்தான். தொடர்ந்து மயங்கி விழுந்தான். உடனே, அவனை பெற்றோர் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டான். இதுகுறித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பானிபூரி சாப்பிட்ட 5 வயது சிறுவன் வாந்தி மயக்கம்
previous post