குடியாத்தம், ஆக.28: குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சமடைந்துள்ளனர். குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(29), ஆக்டிங் டிரைவர். அதேபோல் கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோமதி(20). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கோமதிக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் வேறு ஒரு இடத்தில் வரன் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி கடந்த 19ம் ேததி வீட்டை விட்டு வெளியேறி, காதலனுடன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இருதரப்பு பெற்றோர்கள், உறவினர்கள், கிராம மக்கள் காவல் நிலைய வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் இருவீட்டார் பெற்ேறார்களை அழைத்து அறிவுரை கூறினர். மேலும் கோமதி மேஜர் என்பதால் அவரின் விருப்பப்படி காதல் கணவர் பாஸ்கருடன் அனுப்பி வைத்தனர்.