பெரம்பலூர்: பருவ மழை தப்பிப் பெய்ததால் பாதிக்கப்பட்ட மக்காச் சோளப் பயிர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தாருங்கள். பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் கொளத்தூர், இலுப்பைக்குடி, கூடலூர், பிலிமிசை கிராம விவசாயிகள் கருகிய மக்காச்சோள பயிர்களுடன் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று(30ம்தேதி) பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, இலுப்பைக்குடி, கொளத்தூர், கூடலூர், பிலிமிசை ஆகிய கிராமங் களை சேர்ந்த விவசாயிகள் மழையின்மையால் கருகிய மக்காச்சோள பயிர்களுடன் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :இலுப்பைக்குடி கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் மக்காச் சோளம், சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளோம். விதைப்பு நாளிலிருந்து பருவமழை முறையாக பெய்யாமல் போனதால், போட்டதில் விதைக்குக்கூட விளைச்சல் இல்லாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம்.