பருவ மழையினால் கரூர் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடும் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள 76 பகுதிகளுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பருவமழைக்கு முன்னதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து மழைநீரினால் பாதிப்புகள் ஏதும் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதனை ஆய்வு செய்தும், மேலும் நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட வேண்டியிருப்பின் அது குறித்தான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும். அதிக அளவு மழைபொழிவு ஏற்படும் பட்சத்தில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள்
0