சேலம்: சேலம் மணல் மார்கெட் முதல் பொன்னம்மாப்பேட்ைட வரை பாதாள சாக்கடை பணியால் வாகன ஓட்டிகள் கடந்த இரண்டு மாதமாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாதாள சாக்கடை பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாநகர பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்கப்பட்டது. இரண்டு முறை அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை பணி கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பாதாள சாக்கடை பணி முடுக்கிவிடப்பட்டது. டந்த இரு மாதத்திற்கு முன்பு சேலம் மணல் மார்க்கெட் முதல் பொன்னம்மாப்பேட்டை வரை சாலை நடுவே குழித்தோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இச்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில் திருப்பிவிடப்பட்டுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி செல்லும் பஸ்கள் இவ்வழியாக சென்று வருகிறது. பாதாள சாக்கடை பணியால் சாலை மிகவும் குறுகியதாக மாறியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்லவே சிரமமாக உள்ளது. பணிகள் மெத்தனமாக நடப்பதால் வாகன ஓட்டிகள் தினசரி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.