வேலூர், செப்.6: காட்பாடியில் 11வது வார்ட்டில் பாதாள சாக்கடை பணியில் அரசு பஸ் மாற்று பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி மண்டலம் 1வது மண்டலத்துக்கு உட்பட்ட 11வது வார்டில் ஜாபராபாத் சாலையில் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ள பட உள்ளது. இந்த சாலை மிக குறுகிய சாலையாக இருப்பதாலும் மற்றும் இப்பகுதியில் 15 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை பணி அமைய உள்ளதாலும் இச்சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெறும் பொழுது எந்த ஒரு வாகனங்களும் செல்ல இயலாது. இதற்கான உரிய அனுமதி சம்பந்தப்பட்ட துறையிடம் பெறப்பட்டுள்ளது.
இந்த சாலை வழியாக செல்லும் 16 சி அரசு பஸ் பணி நடைபெறும் பொழுது மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுப்பாதையான வஞ்சூர் சாலை சந்திப்பிலிருந்து, வஞ்சூர் சாலையில் பயணித்து டி.கே.புரம் சாலை வழியாக கழிஞ்சூர் காட்பாடி சாலையை சென்றடைய வேண்டும். மேலும் பாதாள சாக்கடை பணிகள் வரும் 11ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5ம் வரை நடைபெற உள்ளது. பாதாள சாக்கடை பணி நடைபெறும் பொழுது 16சி பேருந்து மற்றும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.