தஞ்சாவூர், மார்ச்5: தஞ்சையில் விளார் சாலை மாரிகுளம் பகுதியில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் வாகனத்தை சிறைப்பிடி த்து கோஷமிட்டனர். தஞ்சை மாநகராட்சி பூக்காரத் தெரு விளார் ரோடு மாரிக்குளம் சுடுகாடு எதிரில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடிக்கடி சாலையில் வெளியேறி பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பெரிய அளவிலான குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த குழாய் வழியாக பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது . இந்த பணியால் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இருந்தாலும் இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை சேதமடைந்தது. மேலும் கழிவு நீரும் சாலையில் வழிந்தோடி பள்ளங்களில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர் .
மேலும் இந்த வழியாக செல்லும் பஸ்களும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டதால் அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி வாகனத்தையும் சிறைபிடி த்து கோஷமிட்டனர். உட னடியாக பாதாள சாக்கடையையும், சாலையையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறு த்தினர். தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியல் கை விட்டு கலைந்து சென்றனர்.