சிவகாசி, ஆக.22: தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மிஸ்டர் விருதுநகர் என்ற தலைப்பில் பாடி பில்டிங் போட்டிகள் சிவகாசியில் நடைபெற்றது. இப்போட்டி 7 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 70 கிலோ பிரிவில் பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் 3ம் ஆண்டு எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் துறை மாணவன் ஜெயகணேஷ் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், கல்லூரி டீன் மாரிச்சாமி, எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் பேராசிரியர் முனிராஜ், பேராசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.