Monday, May 29, 2023
Home » பாடங்களை எளிமையாக்கும் ஆப்ஸ்(apps)!

பாடங்களை எளிமையாக்கும் ஆப்ஸ்(apps)!

by kannappan

நன்றி குங்குமம் தோழி சி.பி.எஸ்.இ, ஸ்டேட்போர்ட், மெட்ரிக்… என பலவகையான பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடத்திட்டங்களிலும் அதற்கு ஏற்ப பாடங்கள் மாறுபடும். மாணவர்களும் அவர்களுக்கான பாடங்களை குறிப்பிட்ட புத்தகங்கள் கொண்டு தான் இன்றும் படித்து வருகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் சில பள்ளிகளில் ஸ்டேட்போர்ட் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஆனால், அந்த முறையும் எல்லா பாடங்களுக்கும் அமைக்கப்பட்டு இருப்பதில்லை. அதனால் மாணவர்களுக்கு பாடங்களில் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன. அதை தீர்த்து வைக்கவும் சரியான முறை இல்லை. இனி இந்தப் பிரச்னையை மாணவர்கள் மட்டும் இல்லை, ஆசிரியர்களும் சந்திக்க வேண்டியது இல்லை. பாடங்கள் குறித்து எந்த விதமான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் எதுவாக இருந்தாலும் அதை ேபாக்க வந்துவிட்டது ஆப். நாம் இருக்கும் இடத்தில் எந்த நேரத்திலும் நமக்கான பாடங்களை படித்துக்கொள்ள இந்த ஆப்கள் உதவி செய்கிறது. அவை என்ன… எவ்வாறு மாணவர்களுக்கு உதவுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.இன்றைய பள்ளிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் திக்‌ஷா ஆப். இதில் மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களுக்கு ஏற்ப திட்டங்கள், பணித்தாள்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் பாடங்களை எளிதாக புரிந்துகொள்வது மட்டும் அல்லாமல் தங்களின் தப்புகளையும் திருத்திக் கொள்ளவும் உதவுகிறது. இந்த ஆப் மூலம் பெற்றோர்களும் குழந்தைகள் பள்ளியில் என்ன பாடங்கள் படிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். சிறப்பம்சங்கள்* மாணவர்களுக்காக மட்டும் இல்லாமல் ஆசிரியர்களுக்காகவும் சிறந்த முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. *; பாடப்புத்தகங்களில் உள்ள குறியீடுகளை; ஸ்கேன் செய்து தலைப்புக்கு ஏற்ப கூடுதல் பாடங்களை கண்டறிந்து படிக்கலாம். *; பாடங்களை டவுன்லோட் செய்தும் படிக்கலாம்.*; வகுப்பறையில் நடத்தப்பட்ட பாடங்கள் தொடர்பான பணித்தாள்களும் இதில் இருப்பதால் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப படிக்கலாம். *; ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் இருப்பதால், மாணவர்கள் அதற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். *; வீடியோக்கள், PDF, HTML, ePub, mobi போன்ற பல உள்ளடக்க வடிவங்களில் பாடத்திட்டங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கு நன்மைகள்*; ஆசிரியர்களுக்காக சுவாரஸ்ய முறையில் பாடங்கள் வழங்கப்பட்டு இருப்பதால், அவர்களால் மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்க உதவும்.*; மற்ற ஆசிரியர்கள் அளித்துள்ள சிறந்த நடைமுறைகள் இதில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அதைக் கொண்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்க உதவுகிறது. *; மாநில துறை நிறுவனத்திடமிருந்து ெவளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பற்றிய தகவல்கள். *; நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை உங்கள் மாணவர்கள் எவ்வாறு புரிந்துள்ளார்கள் என்பதை டிஜிட்டல் முறையில் மதிப்பிடலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நன்மைகள்*; பாடப் புத்தகங்களில் உள்ள; க்யூ குறியீடுகளை ஸ்கேன் செய்து பாடங்களை படிக்கலாம். *; வகுப்பறையில் கற்ற பாடங்களை மறுஆய்வு செய்யலாம். *; புரியாத பாடங்களுக்கு கூடுதல் விளக்கம் காணலாம். *; கணக்கு பாடமாக இருப்பின் அதை உடனடியாக தீர்த்து சரியாகத்தான் விடை அளித்துள்ளீர்களா என்று உடனடி ஆய்வு செய்யலாம்.ஈகோவேஷன் ஆப்இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் சமூக கற்றல் தளமான ஈகோவேஷன் ஆப்பில் 1000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 7 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. *; ஒன்று முதல் பத்தாம் வகுப்பு*; போட்டித் தேர்வுகள் – JEE, NEET, GATE, CAT, IBPS, SSC, UPSC மற்றும் பல.*; தொழில்முறை திறன் சான்றளிப்பு திட்டங்கள் – C, C++, Java, Python, Game Development, Internet of Things, Social Media Marketing, Web Development, Android Development, Robotics, Big Data, Matlab, Solid Works இன்னும் பல.ஈகோவேஷன் பயன்பாடு ஈகோவேஷன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மூவரையும் எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் இணைக்க முடியும். 1) உங்கள் பாடங்களை நிர்வகியுங்கள்… சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் மற்றும் சிறப்பு உறுப்பினர்களாக வடிவமைக்கப்பட்ட குழுக்களுடன் தொடர்பு கொள்ளலாம். 2) குழுவில் புகைப்படங்கள், ஆடியோக்கள் மற்றும் உரைகளை பகிரலாம். 3)வகுப்பறைக்கு அப்பாற்பட்ட பாடங்களையும் கற்றுக் கொள்ளலாம். ஆசிரியர்கள் நேரடியாக மாணவர்களுக்கான ஊக்குவிப்பு செய்திகளையும் அனுப்பலாம். 4. ஆசிரியர்கள் மற்றும் உங்கள் குழந்தைகளுடன் இணைக்க பெற்றோர்கள் தனி கணக்கை உருவாக்கலாம். அதே போல் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைக்க ஒரு தனிக் கணக்கினை அமைக்கலாம். 5. இதன் மூலம் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் பற்றிய நிலையான அறிக்கை கிடைக்கும்.6. எதிர்வரும் தேர்வுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.7. ஆசிரியர்கள் மாணவர்களுக்கான பாடம் குறித்த திட்டங்கள் மற்றும் முக்கிய வழிமுறைகளை பதிவேற்றம் செய்யலாம். 8. மாணவர்கள் குறித்த சந்தேகங்களை பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளலாம். 9. தினசரி மதிப்பீடுகளை எளிதாக கண்காணிக்கலாம்.டிஜிட்டல் டீச்சர்டிஜிட்டல் டீச்சர், இந்தியாவின் சிறந்த e-learning நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மென்பொருள். 2013ம் ஆண்டு முதல் 7000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இது DVD, USB மற்றும் மெமரி கார்டுகள் முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது கைபேசிகள் பயன்பாட்டின் அதிகரிப்பு காரணமாக ஆண்ட்ராய்டு முறையிலும் ஆப்பாகவும் டிஜிட்டல் டீச்சர் மாணவர்களுக்கு உதவி வருகிறது. இந்த ஆப்பினை உங்க செல்போனில் டவுன்லோட் செய்தால் போதும்… அதன் பிறகு பாடங்களை 2டி மற்றும் 3டி முறையில் எளிதாக படிக்கலாம். டிஜிட்டல் டீச்சர், மல்டி மீடியா ஆப் என்பதால், பாடங்கள் எழுத்து வடிவமாக இல்லாமல் அனிமேஷன் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்து அவர்களுக்கு படிப்பு மேல் ஓர் ஈடுபாடு ஏற்படுகிறது. முக்கிய அம்சங்கள்1. கிராபிக்ஸ் பாடத் திட்டங்கள்2. அனிமேஷன்ஸ் (2D / 3D)3. வீடியோக்கள்4. வரைபடங்கள் 5. பாடத்திட்டத்தின் முழு கண்ணோட்டம். எளிமை-பொதுவாக வகுப்பறையில் சாக்பீஸ்கள் கொண்டு கரும்பலகையில்தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஸ்மார்ட் பாட முறைகளை சில பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. ஆனால், டிஜிட்டல் டீச்சர் புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் டிஜிட்டல் முறையில் விவரிக்கிறது. இதனால் பாடங்களை எழுத்து வடிவமா படித்து புரிந்துகொள்வதை விட இது சுலபமாக மாணவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. தெளிவு – ஒரு பள்ளி ஆசிரியர் திறமையுடன் அனைத்து பாடங்களையும் கையாள முடியாது. அதனால் இவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை டிஜிட்டல் முறையில் பின்பற்றுகிறார்கள். சில சமயம் ஆசிரியர் வகுப்பில் சொல்லித் தருவது புரியாமல் போகலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில், மாணவர்கள் குழப்பம் அடைவது வழக்கம். அந்த நேரத்தில் மாணவர்கள் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்கிறார்கள். புரிந்து படிக்காத எந்த விஷயமும் மனதில் பதியாது. விளைவு தேர்வில் கேள்விக்கான விடைகளை எழுத முடியாமல் திணறுகிறார்கள். இந்த ஆப் மூலம் ஒவ்வொரு பாடங்களும் அந்தந்த முறையில் விளக்கப்படுவதால், மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது. அணுகுமுறை – ஒரு பாடத்தை எத்தனை தடவை வேண்டும் என்றாலும், இருக்கும் இடத்திலேயே படிக்க முடியும். மேலும் அன்று வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்களை அன்றே அவர்கள் வீட்டில் படிக்க மிகவும் வசதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஈடுபாடு – வகுப்பறையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். ஆசிரியரால் ஒவ்வொரு மாணவர்கள் மேல் தனிக் கவனம் செலுத்த முடியாது. ஆனால் இந்த ஆப் மூலம் ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட முறையில் பாடங்களை படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும். கவனச் சிதறல்களும் ஏற்படாது.TheTeacher App ஆசிரியர்களுக்கான ஆப். ஆசிரியர்கள் என்றால் அவர்களுக்கு சந்தேகம் வராது என்று சொல்லிட முடியாது. அவர்களுக்கும் சந்தேகங்கள் ஏற்படும். அவர்கள் தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவது மட்டும் இல்லாமல் மேலும் சில விஷயங்களை கற்றுக் கொள்ளவும் இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்தியாவில் 250 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். இதில் 97% மாணவர்கள் பள்ளிக்கு சென்றாலும் படிப்பதில்லை. ஐந்தாம் வகுப்பில் இருக்கும் 50 %க்கும் அதிகமான குழந்தைகளுக்கு படிக்க தெரிவதில்லை. 74% மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் செய்யத் தெரியாது. நம்முடைய எதிர்கால தலைமுறையினரின் நிலை இப்படித்தான் உள்ளது. ;இவர்களின் பிரச்னைக்கு ஒரே தீர்வு ஆசிரியரின் அறிவுத் திறன் மேம்பட வேண்டும். பெரும்பாலான அரசாங்க பள்ளிகள் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு சரியான முறையில் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. மற்ற துறையை சார்ந்தவர்கள் அவர்களின் துறை சம்பந்தமான வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ளும் போது அந்த வாய்ப்பு ஏன் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுவதில்லை? டீச்சர் ஆப் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி அறிவுத்திறனை மேற்கொள்ளும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாடத்திட்டங்கள் குறித்த விளக்கங்கள், புதிய படிப்புகள், கல்வி வளம் என அனைத்தும் உள்ளன. சிறப்பம்சங்கள்*; முற்றிலும் இலவசம்.*; வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் குறித்த விளக்கங்களை தரவிறக்கம் செய்து அதன் மூலம் இவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். *; இந்தியக் கல்வி முறை; நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறலாம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi