ஈரோடு, ஜூலை 9: ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தியை அவதூறு வழக்கை அடிப்படையாக வைத்து எம்பி பதவியை திட்டுமிட்டு தகுதி இழப்பு செய்த பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரவி, ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், சசிகுமார், ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் திருச்செல்வம் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், செந்தில் ராஜா, சிறுபான்மை துறை துணைத்தலைவர் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.