உடுமலை, நவ.4: பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி பொறுப்பாளர்கள் பயிலரங்கம் உடுமலையில் நேற்று நடந்தது. கட்சியின் தமிழ்நாடு மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், பொன் பாலகணபதி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், மண்டல தலைவர்கள் கண்ணாயிரம், நாகமாணிக்கம், மாரியப்பன், பாலசுப்பிரமணியம், மடத்துக்குளம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுதாகர் ரெட்டி கூறியதாவது:மக்கள் பாரதிய ஜனதா கட்சியை நம்புகிறார்கள். நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பாஜ வெற்றி பெறும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மக்களுக்காகவும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.