தேனி, ஜூன் 27: தேனி மாவட்ட பாஜ சார்பில் மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் தேனி நகர் நேரு சிலை அருகே நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து திமுக எம்பி ஆ.ராசா முட்டாள் என கூறியதாக கூறி அவரின் உருவப் படத்தை கிழித்தெறிந்து அவமரியாதை செய்யப்பட்டது. இதுகுறித்து தேனி கிராம நிர்வாக அலுவலர் ஜீவா அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் பாஜ மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உட்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.