கெங்கவல்லி, பிப்.15: ஆத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் மற்றும் சம்பவத்தை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்த ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் அழகுராணி அனுமதி மறுத்தார். இந்நிலையில் தடையை மீறி ஆத்தூர் பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் போக்குவரத்துக்கும், பொதுமக்ளுக்கும் இடையூறாக நேற்று பாஜ சேலம் மாவட்ட தலைவர் சண்முகநாதன், ஆத்தூர் நகர தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
பாஜவினர் மீது வழக்குபதிவு
0
previous post