தர்மபுரி, ஆக.8:தர்மபுரி மாவட்ட பாஜ அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:ஒன்றிய பாஜ அரசு, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து, ₹48 லட்ச கோடி மதிப்பில், பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயரை குறிப்பிடாததால், தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்ற பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. பட்ஜெட்டில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை. ஜிஎஸ்டி என்பது ஒரு மாநிலம் கொடுக்கும் நிதியை, அந்த மாநிலத்துக்கு பிரித்து கொடுப்பது இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் பிரித்து கொடுப்பதாகும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்ட பார்வையாளர் முனிராஜ், ஓபிசி துணை தலைவர் ஆறுமுகம் உடனிருந்தனர்.