புதுச்சேரி, அக். 15: பாஜக எம்.எல்.ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஆகியோர் குறுக்கு வழியில் கொள்ளை அடித்த வழக்கில் சிபிஐ தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரம் பதிவு செய்தலில் அனுமதியின்றி விளைநிலங்களை குழிக்கணக்கில் பத்திரம் பதிவு செய்து பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இது சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிகார வர்க்கத்தினர் இருப்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரணை செல்ல முடியாது. எனவே இதன் மீது, சிபிஐ விசாரணை நடத்தி அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் நில அபகரிப்பு வழக்கில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஆகியோர் குறுக்கு வழியில் கொள்ளை அடித்த வழக்கில் சிபிஐ தலையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் காலியாகவுள்ள 12 என்ஆர்ஐ மருத்துவ இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்காமல், அரசின் இடங்களில் சேர்த்து அரசின் கட்டணத்தில் மாணவர்களை சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா, யாரால் பாதிக்கப்பட்டார், அவர் மீது தாக்குதல் நடத்திய ஆணாதிக்க சக்தி யார்? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும், என்றார்.