வேலூர், ஆக.15: வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் கடந்த 1947 ஆகஸ்ட் 14ம் தேதி இந்திய- பாகிஸ்தான் பிரிவினை நடந்த துயர சம்பவங்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை ெபாதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் பிரிவினை நடந்தது. அப்போது ஏற்பட்ட துயர சம்பவங்கள் நடந்த நினைவு தினமான நேற்று அப்போது நடந்த சம்பவங்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று ெதாடங்கியது. இன்றும் இந்த கண்காட்சி ெதாடர்ந்து நடக்கிறது. கண்காட்சியை நேற்று காலை 9.30 மணியளவில் வேலூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ராஜகோபால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வேலூர் தலைமை அஞ்சலக அதிகாரி முரளிதரன் முன்னிலை வகித்தார். அஞ்சல் ஆய்வாளர் ஜெயபால், அஞ்சல் செய்தி தொடர்பாளர் வீரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் அஞ்சலக அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியை நேற்று ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இன்று மாலை 5.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.