விருதுநகர், ஏப்.18:விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் மேம்பால இறக்கத்தில் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தேவிலால் சோரன்(37) என்பவர், பஸ் ஹாரன் சத்தத்தை கேட்காமல் செல்போன் பேசியபடியே வந்துள்ளார். இதில் பஸ்சின் இடது பக்கம், அவர் மீது இடித்ததில் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசில் பஸ் டிரைவர் பற்குணன் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.