பரமக்குடி,அக்.27: பரமக்குடியில் இருந்து இளையான்குடி வழியாக காரைக்குடிக்கு செல்லும் தனியார் பேருந்து ஓட்டப்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பி விட்டு திரும்பியது. அப்போது மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மூதாட்டியின் மீது பேருந்து ஏறி இறங்கும் சிசிடிவி காட்சியை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஸ் மோதி மூதாட்டி பலி
65
previous post