செஞ்சி, ஆக. 17: செஞ்சி அருகே சொகுசு பேருந்து மீது லாரி மோதி 19 பேர் படுகாயம் அடைந்தனர். புதுச்சேரியில் இருந்து சொகுசு பேருந்து பெங்களூர் நோக்கி செஞ்சி வழியாக சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு செஞ்சி அடுத்த செம்மேடு தனியார் சர்க்கரை ஆலை அருகே பேருந்து சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மரக்காணம் எல்லம்மாள் (40), எஸ்வந்த் (20), ரஞ்சித்குமார் (38), ஹேமலதா (35), மணிகண்டன் (8) உட்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து நல்லான்பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பேருந்து மீது லாரி மோதி 19 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.