தேன்கனிக்கோட்டை, ஆக.24: தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மலை கிராமங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால், பள்ளி நேரங்களில் மாணவர்கள் படிகளில் தொங்கியவாறு செல்லும் நிலை உள்ளது. அஞ்செட்டியிலிருந்து நாட்றாம்பாளைம் வழியாக, ஒகேனக்கல் செல்லும் அரசு பஸ்சில் நாட்றாம்பாளைம் பகுதி மாணவர்கள் அரசு பள்ளிக்கு செல்ல ஆபத்தான நிலையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். இந்த காட்சியை அரசு பஸ்சின் பின்னால் காரில் பயணம் செய்தவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பள்ளி நேரங்களில் போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
previous post