ஊட்டி,நவ.17: ஊட்டி பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் நினைவு பூங்கா அருகே வளைவான பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேரிங்கிராஸ் பகுதி, இத்தலார் பகுதிக்கு செல்ல கூடிய சாலைகள் உள்ளன. இச்சாலையோரத்தின் அம்பேத்கர் நினைவு நகராட்சி பூங்கா உள்ளது. சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல எட்டின்ஸ் சாலைக்கு செல்ல வளைவான பகுதி உள்ளது.
இந்த வளைவு பகுதியில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அரசு பஸ்கள்,லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் வளைவான பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதையும்,பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதையும் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.