உசிலம்பட்டி, ஜூன் 26: மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தேனிக்கு பயணிகளுடன் புறப்பட்டுச்சென்ற அரசு பஸ் டிரைவர் ராஜா ஓட்டிச்சென்றார். இந்த அரசு பஸ் வாலாந்தூர் கண்மாய் அருகே நள்ளிவில் வந்தபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கீழதாவரம் பகுதியச் சேர்ந்த செல்லத்துரை மகன் மனோகர்ராஜ் (45) என்பவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்களை வாலாந்தூர் போலீசார் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.