வேடசந்தூர், செப்.2: வேடசந்தூர் பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் காயமடைந்தனர். வேடசந்தூர் பஸ்நிலையத்தில் நேற்று பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பஸ் நிலையத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதில் வேடசந்தூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ராஜேஸ்வரி(18), கல்வார்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் (70) ஆகியோருக்கு பலத்த aகாயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஏற்கனவே பல்வேறு இடங்களில் பஸ் நிலைய மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 35 ஆண்டுகாலம் ஆவதால் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.