சேலம், ஜூன் 16: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்திற்குட்பட்ட இடைப்பாடி பணிமனையை சேர்ந்த பஸ் ஒன்று நேற்று காலை இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணத்திற்கு சென்றது. இந்த பஸ்சின் டிரைவாக முருகேசனும், கண்டக்டராக சண்முகமும் பணிபுரிந்தனர். அப்போது பஸ் தஞ்சாவூர் அடுத்த அய்யம்பேட்டை என்ற இடத்தில் சென்றபோது பெண் பயணி ஒருவர் பஸ்சில் ஐந்து பவுன் நகையை தவறிவிட்டார். அந்த நகையை டிரைவர், கண்டக்டர் மீட்டு கும்பகோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அந்த நகையை போலீசார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் டிரைவர், கண்டக்டர் ஒப்படைத்தனர். பஸ்சில் பெண் பயணி தவறிவிட்ட நகையை பத்திரமாக ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு போலீசார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
பஸ்சில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகை ஒப்படைப்பு
54