3 பெண்கள் கைதுஓசூர், அக்.15: ஓசூர் அருகே உள்ள கரியசந்திர கிராமத்தைச் சேர்ந்தவர் விண்ணரசி(29). இவர் ஓசூர் பஸ்நிலையத்தில் இருந்து பேரிகைக்கு செல்ல டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்த 3 பெண்கள், விண்ணரசியின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை திருட முயன்றனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் கையும், களவுமாக பிடித்து டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில், அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் தாலுகா லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரேணுகா (45), பார்வதி (55), சாவித்திரி(58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 பேரையும் சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.