கோவை, மே 26: கோவையில் போக்குவரத்து போலீசார் ஏர்ஹாரன் பயன்பாடு கண்டறிய பஸ்களில் நேற்று சோதனை நடத்தினர். காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த இந்த ேசாதனையில் வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் ஈடுபட்டார். சிங்காநல்லூர், ராமநாதபுரம், கணபதி, காந்திபார்க், பீளமேடு உள்பட பல்வேறு பகுதிக்கு செல்லும் பஸ்களில் போலீசார் சோதனை செய்தனர்.
இதில் ஏர் ஹாரன், மியூசிக்கல் ஹார்ன்களை சிலர் பயன்படுத்திய தெரியவந்தது.
இவற்றை போலீசார் அதிரடியாக அகற்றினர். மேலும், ஏர் ஹாரன் இருக்கும் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 15 ஏர் ஹார்ன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது குடித்து இருந்தார்களா எனவும் போலீசார் பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர். ஏர்ஹாரன் தொடர்பாக பஸ்சுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 12 பஸ்களுக்கு 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.