திருவாரூர், ஆக.13: திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் உள்ள 110/33/11 கி-.வோ துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கப்பல் நகர், அடியக்கமங்கலம் மற்றும் கொரடாச்சேரி ஆகிய 33/11 துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் நகர், தஞ்சை சாலை, விஜயபுரம், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருபயத்தாங்குடி, கப்பல் நகர், பிலாவடிமூலை, சிதம்பரநகர், ஆந்தகுடி, அலிவலம், புலிவலம், தப்பாளாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.