Monday, March 4, 2024
Home » பவானி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 454 பேர் மனு

பவானி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 454 பேர் மனு

by Suresh

பவானி, டிச. 24: பவானி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம் 14,15,16, 17, 18, 19 மற்றும் 23, 24வது வார்டுகளுக்கு வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணை ஆட்சியர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். பவானி தாசில்தார் தியாகராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் வீரலட்சுமி முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் மோகன்குமார் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் முகாமைத் தொடக்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய், காவல், மின்சாரம் உட்பட 13 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

மொத்தம் 454 மனுக்கள் பெறப்பட்டதில், 24 மனுக்கள் மீது தீர்வுகள் அறிவிக்கப்பட்டது. பவானி நகராட்சி நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட 46 மனுக்களில், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்குதல் உட்பட 6 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தேர்தல் துணை தாசில்தார் சரவணன், மின்வாரிய உதவி பொறியாளர் யசோதா, பவானி அரசு மருத்துவமனை மருத்துவர் அய்யப்பன், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் கோகுலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ரவி, காவேரி செந்தில், கோகிலாம்பாள், கவிதா மோகன், சுமதி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூன்றாம் கட்ட முகாம் வரும் 27ம் தேதி 20, 21, 22, 25, 26, 27 ஆகிய வார்டுகளுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

You may also like

Leave a Comment

fifteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi