ஈரோடு,ஜூன்24: ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் பள்ளிகளுக்கு கழிவறைகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் முதற்கட்டமாக 1500 மாணவிகள் பயிலும் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆலோசனைக் கிணங்க ரூ.12.70 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகளை அமைத்துக் கொடுத்துள்ளது.
இவற்றை பயன்பாட்டுக்கு அளிக்கும் நிகழ்ச்சி 20ம் தேதி பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒளிரும் ஈரோடு அறங்காவலர்கள் ரபீக், யோகேஷ்குமார் மற்றும் பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், துணைத் தலைவர் மணி,பவானி நகராட்சி உறுப்பினர் சரவணன், தலைமை ஆசிரியை ஆனந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமலைசாமி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கதிர்வேல் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டினர்.
முன்னதாக பள்ளி மாணவிகளுக்கு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றியும் அதை எதிர்கால மாணவிகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.