கோவை: பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் எந்த நேரத்திலும் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலை உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 11 மணிக்கு 104.45 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர், பவானி ஆற்றில் இருந்து திறந்து விடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது….