காளையார்கோவில், ஜூலை 26: காளையார்கோயிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
மாவட்ட பொதுக்குழு கூட்ட முடிவுகளை முன்மொழிந்து மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் பேசினார். கூட்ட முடிவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் முடிவுகளை பெற்று அமல்படுத்த வேண்டும் தொடர்பான பொறுப்புகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.